உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு: பர்கூர் வேளாங்கண்ணி அகாடமி மாணவர்கள் சாதனை -தம்பிதுரை எம்.பி. பரிசுகளை வழங்கினார்

Published On 2022-10-03 14:10 IST   |   Update On 2022-10-03 14:10:00 IST
  • 2022-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
  • அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் 720&க்கு 655 மதிப்பெண் பெற்ற சந்தோஷ்குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதே போல் ஹரிஷ்வரன்(628) இரண்டாம் இடத்தையும், பெலினா தேஜல் (621) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மேலும், தனுஷ் ஆதித்யா (620), மாயா(617), தமிழரசு (616), தமிழரசன்(601) மதிப்பெண் பெற்றுள்ளனர். 7 மாணவர்கள் 600க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், இந்த அகாடமியில் தேர்வு எழுதியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர்.இந்த மாணவர்களுக்கு பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு அகாடமியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். விழாவில் வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பங்கேற்று, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. ராஜேந்திரன், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், அகாடமி பொறுப்பாளர் யுவராஜ், ஒருங்கிணைப்பாளர் வேமுலாசந்திரசேகர், பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News