உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய மேஸ்திரி கைது
- கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்.அப்போது ஒரு ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.
- விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் (41) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள எம்.எஸ்.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27).கூலி தொழிலாளி.
இவர் தனது மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் உள்ள கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்.அப்போது ஒரு ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.
இதையடுத்து அவரை கையும்,களவுமாக மடக்கி ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் (41) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.