உள்ளூர் செய்திகள்

தொடர் போராட்டம் அறிவித்த கிராம மக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம மக்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை

Published On 2022-09-19 13:00 IST   |   Update On 2022-09-19 13:01:00 IST
டி.எடப்பாளையம் ஊராட்சியினை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வரை தொடர்போராட்டம் செய்யப்போவதாகவும் கூறி போராட்டம் செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் டி.எடப்பாளையம் ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரியிடம் மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

இதுவரை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க ப்படவில்லை. இதனால் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை பட்டா சிட்டா பிறப்பு இறப்பு சான்று பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அலுவலர்களை சந்திக்க முடியாமல் சிரமப்படு வதாகவும் தங்களின் நிலப்பரப்புகள் உள்ள சித்தலிங்கமடம், எல்ரா ம்பட்டு, மருதூர், தி.கொடியூர் ஆகிய பகுதிகளை ஒன்றாக இணைத்து டி.எடப்பாளையம் ஊராட்சியினை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வரை தொடர்போராட்டம் செய்யப்போவதாகவும் கூறி போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மற்றும் அதிகாரிகள் காவல்து றையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் அமைச்சர் உடனடியாக வருவாய் கிராமம் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார் அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News