உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே கோவில் உண்டியலில் திருடிய பணத்தை வீசி சென்ற கொள்ளையன்

Published On 2022-12-20 12:49 IST   |   Update On 2022-12-20 12:49:00 IST
  • கோவில் உண்டி யலை உடைத்து பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
  • மர்ம நபர் காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்றார்.


சங்கராபுரம் அருகே அரச ம்பட்டு கிராமம் மணி முத்தாறு அருகே பால தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கடந்த 12-ந்  தேதி பூஜை செய்வதற் காக கோவில் பூசாரி சம்பத் கோவிலுக்கு சென்றபோது கோவில் கதவு உடைந்து கிடந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவில் உண்டி யலை உடைத்து அதில் இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பூசாரி சம்பத் நேற்று வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்வ தற்காக வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததை கண்டு வியப்படைந்தார். பின்னர் இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சங்கராபுரம் போலீசாரும், ஊர் முக்கியஸ்தர்களும் விரைந்து வந்து கோவிலில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சேகரித்தனர். மொத்தம் ரூ.17 ஆயிரம் இருந்தது. விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவாரம் கழித்து காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News