உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே:என்ஜீனியர் தவறவிட்டலேப்டாப், கேமரா ஒப்படைப்பு

Published On 2023-11-16 14:17 IST   |   Update On 2023-11-16 14:17:00 IST
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாம்பாக்கத் திலிருந்து சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரது லேப்டாப் பேக் தவறி விழுந்து விட்டது. அதில் ஒரு லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் வீடியோ கேமரா இருந்தது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் அந்த சாலையில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.அதன்படி சாலையோரம் கிடந்த லேப்டாப் பேகை போலீசார் கண்டறிந்தனர். அதனை என்ஜீனியர் பாலாஜியிடம் பண்ருட்டி போலீசார் ஓப்படைத்தனர்.

Tags:    

Similar News