உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14 லட்சம் மோசடி
- செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
- வெவ்வேறு வங்கி கணக்குகளில் இந்த பணத்தை செலுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 70). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த ஜூன் மாதம் இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் நாகப்பனின் இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளதாகவும் ,இதற்காக பல்வேறு பணிகளுக்காக ரூ.14 லட்சத்து 26 ஆயிரம் செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதை நம்பிய நாகப்பன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் இந்த பணத்தை செலுத்தியுள்ளார்.
ஆனால் செல்போன் எண்ணை நாகப்பனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகப்பன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமியை தேடி வருகிறார்.