உள்ளூர் செய்திகள்

கெலமங்கலம் அருகேஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Published On 2023-03-31 15:12 IST   |   Update On 2023-03-31 15:12:00 IST
  • 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
  • கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி ஒசபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த சீதா சமேத ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பக்தர்கள் ஆஞ்சநேயரின் சிலை மீது ரோஜா மலர்களை தூவி அபிஷேகம் செய்தனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமிகளை போற்றும் விதமாக ஸ்ரீ சீதா கல்யாணம் என்ற ஹரிகதா நிகழ்ச்சி கோலாரை சேர்ந்த மஞ்சுளா பாகவதாரணி யால் தெலுங்கு மொழியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News