உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டிணம் அருகே மாந்தோப்பில் மது அருந்தியதை கண்டித்தவர் மீது தாக்குதல்

Published On 2022-09-09 15:02 IST   |   Update On 2022-09-09 15:02:00 IST
  • தோப்பில் ஒரு ஆசாமி அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
  • வாக்குவாதத்தில் போதை ஆசாமி அருகே கிடந்த கட்டையை எடுத்து அருணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்துள்ள காவேரிப்பட்டிணம் சின்னாறு தெருவை சேர்ந்தவர் அருண்

(வயது 37).

இவர் தனக்கு சொந்த மான மாந்தோப்புக்கு சென்றார் . அப்போது அந்த தோப்பில் ஒரு ஆசாமி அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அருண் தனது தோப்பில் அமர்ந்து மது குடிப்பது ஏன் என்று கண்டித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதை ஆசாமி அருகே கிடந்த கட்டையை எடுத்து அருணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அருண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அருண் தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அருணை தாக்கிய கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த ஜம்பு (எ ) ஈஸ்வரன் (வயது 43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News