உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே ரூ.9.90 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை செல்லக்குமார் எம்பி., தொடங்கி வைத்தார்.

கந்திகுப்பம் அருகே ரூ.9.90 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி- செல்லக்குமார் எம்பி., தொடங்கி வைத்தார்

Published On 2022-07-05 13:31 IST   |   Update On 2022-07-05 13:31:00 IST
  • செங்கொடி நகரில் ரூ.9.90 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது.
  • பெருகோபனப்பள்ளியில் எம்.பி., செல்லக்குமார் காங்கிரஸ் கொடியை ஏற்றினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அடுத்த செங்கொடி நகரில் ரூ.9.90 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது.

கந்திகுப்பம் காலபைரவர் கோயில் பைரவ சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.

கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர். செல்லக்குமார், கட்டடம் கட்டுவதற்கான பணியைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், வக்கீல் அசோகன், மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரத்குமார், சேவாதளம் நாகராஜ், பர்கூர் நகர தலைவர் யுவராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் மகிலரசி ஜெயபிரகாஷ், ஜேக்கப் வில்லியம்ஸ், துணைத் தலைவர் மாதம்மாள் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று காலை பெருகோபனப்பள்ளியில் எம்.பி., செல்லக்குமார் காங்கிரஸ் கொடியை ஏற்றினார். தொடர்ந்து மதியம் எலத்தகிரி அரசு உதவி பெறும் பள்ளி கட்டடத்திற்கான பூமி பூஜையும், அங்கிநாயனப்பள்ளி மற்றும் மல்லப்பாடியில் நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜையும் செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News