உள்ளூர் செய்திகள்
ஓசூர் சிப்காட் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு
- அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஜாகத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட ஜாகத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா . இவரது மகன் ஜாகத் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஜாகத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜாகத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.