உள்ளூர் செய்திகள்

ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகளை படத்தில் காணலாம்.

தேன்கனிக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Published On 2022-06-09 17:11 IST   |   Update On 2022-06-09 17:11:00 IST
  • ஆற்றங்கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.
  • நோய் பரவும் அபாயம் உள்ளது.

தேன்கனிக்கோட்டை, 

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் இஸ்லாம்பூர், பகுதிகளில் ஏராளமான கோழி, ஆடு, மாடு இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கடைகளில் கழிவுகளை கடைகளின் உரிமையாளர்கள் சிமெண்ட் பைகளில் கட்டி இரவு நேரங்களில் தண்டரை பஸ் நிறுத்தம் அடுத்து சனத்குமார் நதி ஆற்றங்கரையோரத்தில் போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த ஆற்றுநீர் அப்பகுதி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நீராதாரமாக திகழும் இந்த ஆற்றங்கரையோரத்தில் இருபுறமும் இறைச்சிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி வந்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

இப்பகுதியில் திருமணமண்டபங்கள், தொழில்சாலைகள் பசுமை குடில்கள் இருக்கின்றது.

மேலும், இது தேன்கனிகோட்டை-ஒசூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருப்பதால் பஸ்களில் டூவிலர்களில் செல்பவர் தூர்நாற்றத்தாதால் அவதிபடுகின்றனர்.

இந்நிலையில் மழை பெய்யும் சமயங்களில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு இறைச்சி கழிவுகளை நாய்கள், பன்றிகள் தின்று சிதறச் செய்கிறது. அவ்வாறு வரும் கழிவுகள் காற்று பலமாக வீசும் போது சாலையின் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது.

இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் போய் விடுகின்றனர்.

இச்சம்பவம் சமுக ஊடகங்களில் பரவியால் தகவல் அறிந்த ஊராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுத்து கழிவுகளின் மீது மண்கொட்டி தற்காலிகமாக முடியுள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இறைச்சிக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறைச்சிக் கடைகளில் விழும் கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தி வேறு இடங்களில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பல இறைச்சி கடைகள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருவதால் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News