உள்ளூர் செய்திகள்

டையர் வெடித்து விபத்தில் சிக்கிய வாகனம்.

போச்சம்பள்ளி அருகே டெம்போ டயர் வெடித்து விபத்து- 50 கோழிகள் பலி

Update: 2022-10-06 09:54 GMT
  • நிலை தடுமாறி புளிய மரத்தில் மோதி டெம்போ தலை கீழாக கவிழ்ந்தது.
  • டெம்போவில் ஏற்றி வந்த 300-க்கும் மேற்பட்ட கோழிகளில் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.

போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ள காட்டுவெண்றவள்ளி பகுதியில் பண்ணையில் வளர்த்து வரும் கோழிகளை தினமும் ஆந்திரா மாநிலத்திற்கு டெம்போ மூலம் கொண்டு விற்பனை செய்து வருவது வழக்கம்.

அது போல் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் டெம்போவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை ஏற்றி கொண்டு ேபாச்சம்பள்ளி வழியாக ஏற்றி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அப்புகொட்டாய் பகுதியில் வளைவில் திரும்பும் போது டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி புளிய மரத்தில் மோதி டெம்போ தலை கீழாக கவிழ்ந்தது.

வண்டியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். டெம்போவில் ஏற்றி வந்த 300-க்கும் மேற்பட்ட கோழிகளில் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.

இதுகுறித்து நாகர சம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோழி மற்றும் பால், பூ ஏற்றி வரும் டெம்போ வாகனங்கள் கண்ணை மூடிகொண்டு மின்னல் வேகத்தில் தினமும் பறந்து செல்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த விபத்து பகல் நேரத்தில் ஆகி இருந்தால் பல உயிர்கள் சேதம் அடைந்திருக்கும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

Tags:    

Similar News