உள்ளூர் செய்திகள்

ரெயில்வே மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மாணவிகள்.

ஆண்டிபட்டி அருகேரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அவதி

Published On 2023-10-16 11:33 IST   |   Update On 2023-10-16 11:33:00 IST
  • நேற்று இரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
  • இதனால் இன்றுகாலை அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி தண்டவாளத்தை கடந்து சென்றனர்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டியில் இருந்து மறவபட்டி, போடி தாச ன்பட்டி, மணி யாரம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் அடியில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரும் விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று இரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இத னால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சென்றது.

மேலும் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. நடந்து செல்ப வர்கள் சுரங்கப்பாதையை கடக்க முடியவில்லை.

இதனால் இன்றுகாலை அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி தண்டவாளத்தை கடந்து சென்றனர். இந்த மண்சாலை மழையால் வழுக்கிச் சென்றதால் தவறி விழும் நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் இதே நிலைமை தொடர்வதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே ரெயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News