உள்ளூர் செய்திகள்
அஞ்செட்டி அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மாணவி பலி
- அஞ்செட்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் ஷானிசா குளிக்க சென்றுள்ளார்.
- சுயநினைவை இழந்த ஷானிசா நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் ஷானிசா (வயது 20).இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று அஞ்செட்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விழுந்த ஷானிசாவின் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
இதனால் சுயநினைவை இழந்த அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.