உள்ளூர் செய்திகள்

அஞ்செட்டி அருகே விவசாயி வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகள் பறிமுதல்

Published On 2022-10-08 14:56 IST   |   Update On 2022-10-08 14:56:00 IST
  • அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பையில் காடு பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. .

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கஞ்சா செடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பையில் காடு கிராமத்தில் சுப்பிரமணி (வயது 53) என்பவருடைய வீட்டின் பின்புறத்தில் 5 அடி உயரமுள்ள தண்டு இலையுடன் கூடிய பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ஆகும்.போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சுப்பிரமணியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News