உள்ளூர் செய்திகள்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் என்சிசி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

என்.சி.சி. மாணவர்களுக்கு அண்ணா விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி

Published On 2023-05-24 09:02 GMT   |   Update On 2023-05-24 09:02 GMT
  • இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார்.
  • தினசரி காலை கொடி அசைத்த பின்னரே தங்கள் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என அதிகாரி தெரிவித்தார்.

கடலூர்:

என்.சி.சி. மாணவர்கள் கடலில் உள்ள அனைத்து சூழ்நிலைகளை புரிந்து கொள்ள ஏதுவாகவும், அதனால் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கடற்கரைகளை சுத்தப்படுத்துதல், இரத்ததான முகாம் போன்ற முகாம்கள், பேரணிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கப்பற்படை பிரிவு என்.சி.சி. மாணவர்களுக்கு கடலில் நீந்தவும், பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார். இதையடுத்து என்.சி.சி. மாணவர்களுக்கு முதற்கட்டமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 120 ஆண் மற்றும் பெண் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் பாய்மர கப்பல் சாகச பயணம் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் சிறந்து விளங்கும் 60 மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதையடுத்து அவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் அழைத்து செல்லப்படுவார்கள். தொடர்ந்து காரைக்காலில் இருந்து மீண்டும் பாண்டி ச்சேரிக்கு கடலில் பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின் போது கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் போன்ற கடற்கரை யோரங்களில் நின்று தினமும் காலையில் பயிற்சி அளிக்கப்ப டுவதுடன் முக்கிய அதிகாரிகள் மூலம் தினசரி காலை கொடி அசைத்த பின்னரே தங்கள் பயணத்தை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என அதிகாரி தெரிவித்தார்..

Tags:    

Similar News