உள்ளூர் செய்திகள்

விழாவில் பரதநாட்டிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவிலில் நவராத்திரி கலாப கலை விழா

Published On 2023-10-22 10:47 GMT   |   Update On 2023-10-22 10:47 GMT
  • தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.
  • ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அடுத்த கோவிலூர் நெல்லி தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

தற்போது நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது.

தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.

அதன்படி விழாவின் 7-ம் நாளான நேற்று காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீ மூகாம்பிகா அலங்காரம் செய்யப்பட்டது.

இன்று 8-ம் நாள் விழா நடந்து வருகிறது.

விழாவில் மாலையில் நவராத்திரி கலாபக் கலை விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

இதையடுத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அறங்காவலர் காத்தாயி அடிமை சுவாமிநாதன் முனையதிரியர் கேடயம், பரிசு வழங்கி பாராட்டினார் .

Tags:    

Similar News