உள்ளூர் செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவிலில் நவசண்டியாகம்
- கோவிலில் கலச பூஜை, குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை நடந்தன.
- பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரியமாரியம்மன் கோவிலில், நவசண்டி மகாயாக இரண்டு நாள் விழா தொடங்கியது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், சண்டி பாராயணம், பூஜைகள் நடந்தன.
பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், மாலை 5 மணிக்கு கலச பூஜை, குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இன்று காலை கோபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், நவசண்டி மகா யாகம் ஆகியவை நடைபெற உள்ளன.