உள்ளூர் செய்திகள்

வாழை இலையில் பச்சரிசி, மஞ்சள் கொண்டு “அன்னை மடியில் ஆரம்பக்கல்வி விழா” நடைபெற்ற போது எடுத்த படம்

பாவூர்சத்திரம் அருகே சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா

Published On 2022-10-06 07:45 GMT   |   Update On 2022-10-06 07:45 GMT
  • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் அடுத்த பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
  • பூஜையை மெருகூட்டும் வகையில் 4 அணி மாணவர்கள் இந்தியாவின் 4 திசைகளிலும் முக்கிய நகரங்களின் வரலாற்று சின்னங்களை தனித்தனியே அவற்றின் தனித்துவத்தை விளக்கும் விதமாக செய்து காட்சிப்படுத்தினர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் அடுத்த பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பூஜையை மெருகூட்டும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸி, சன்பிளவர் எனும் 4 அணி மாணவர்களும் இந்தியாவின் 4 திசைகளிலும் முக்கிய நகரங்களின் வரலாற்று சின்னங்களை தனித்தனியே அவற்றின் தனித்துவத்தை விளக்கும் விதமாக செய்து காட்சிப்படுத்தினர். மார்னிங் குளோரி அணி தென்னிந்தியாவையும், சன்பிளவர் அணி மேற்கு இந்தியாவையும், லோட்டஸ் அணி கிழக்கு இந்தியாவையும், ரைசிங் டைஸி அணி வட இந்தியாவையும் அதனதன் வரலாற்றுச்சின்னங்கள் உடன் நேர்த்தியாக உருவாக்கியிருந்தனர்.

மேலும் வரலாற்று சின்னங்கள் தோன்றிய விதம், காலம் அவற்றின் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை பள்ளியின் சக மாணவர்களுக்கும், கொலுவை காண வந்த பெற்றோர்களுக்கும் விளக்கி காட்டினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதங்களை தயார் செய்து, மலர்களால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்பட்டன.

9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு நடைபெற்ற நிலையில் 10-வது நாளான விஜயதசமி அன்று வாழை இலையில் பச்சரிசி, மஞ்சள் கொண்டு "அன்னை மடியில் ஆரம்பக்கல்வி விழா" நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News