உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்


வாசுதேவநல்லூரில் தேசிய நூலக வார விழா

Published On 2022-11-17 14:25 IST   |   Update On 2022-11-17 14:25:00 IST
  • மாணவர்களுக்கு பேச்சுப்*போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
  • மாணவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் அரசு கிளை நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத்தலைவர் லைலா பானு ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், வாசகர் வட்ட தலைவர் கணேசன், அய்யன் திருவள்ளுவர் அறப்பணி மன்றம் தலைவர் மாரியப்பன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், காந்திஜி சேவா சங்க செயலாளர் தவமணி, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது. இதில் காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, நாடார் உறவின்முறை தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஜவகர் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலாபானு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், தவமணி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுமங்கலி கோமதி சங்கர், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் அமுதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News