தேசிய குடற்புழு நீக்க முகாமை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் தேசிய குடற்புழு நீக்க முகாம்
- குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாது காக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.
- பாலுட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாமினை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கி னார். இந்த முகாமிற்கு, ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-
இந்த முகாம், வருகிற 16-ந்தேதியும் நடைபெறும். இந்த முகாம்களில், குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாது காக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இனப்பெருக்க 20 வயது முதல் 30 வயது வரையுள்ள தர்ப்பம் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், 1,800 பள்ளிகள் மற்றும் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 7,01,724 பயனாளிகள் பயனடைவார்கள்.1 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 14 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் கல்லூரிகளிலும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 16-ந் தேதி இந்த மாத்திரை வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.