உள்ளூர் செய்திகள்

ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய மாநாடு

Published On 2023-03-04 09:27 GMT   |   Update On 2023-03-04 09:27 GMT
  • உயிர் மருத்துவ துறை சார்பில், 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது.
  • டாக்டர் அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிர் மருத்துவ துறை சார்பில், 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது.

கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்தார். ஓசூர் காவேரி மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர் அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவ நோக்கங்களுக்காக

பயோமெடிக்கல் உபகரணங் களை தயாரிப் பதன் முக்கியத்துவம் மற்றும் உயிர் மருத்துவ பொறியாளர்கள், மருத்துவர்களின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்குகிறார்கள் என்பதை பற்றி விளக்கினார். மாநாட்டின் போது உயிர் மருத்துவத்தில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு

நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைத் தலைவர் டாக்டர்.உதய சூரியா மற்றும் பேராசிரியர் கணேஷ் பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், பங்கேற்ற மாணவர்கள் தங்களது புதுமையான கருத்துக்களை முன்வைத்தனர். மேலும், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மாநாட்டில்,கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News