உள்ளூர் செய்திகள்

காசநோய் கண்டறிய பரிசோதனை

Published On 2023-09-05 15:40 IST   |   Update On 2023-09-05 15:40:00 IST
மக்களுக்கு காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா என கண்டறிய பரிசோதனை

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில் பள்ளிபாளையம் ஒன்றியம் களி யனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவத்திபாளையம் குடி யிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா என கண்டறிய பரிசோதனை நடந்தது.

நடமாடும் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காச நோய் துறை துணை இயக்கு னர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் திவ்யா, களிய னூர் ஊராட்சி தலைவர் ரவிகுழந்தைவேல், துணை தலைவர் வெங்கடேசன் மற்றும் சுகாதார துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News