உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டாரத்தில் தென்னை நடவுக்கு மானியம் வழங்கல்

Published On 2023-08-29 15:32 IST   |   Update On 2023-08-29 15:32:00 IST
  • தென்னங்கன்றுகள் நடுவதற்கும் விவசாயி களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம்
  • ஒரு விவசாயிக்கு வெட்டி அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மரத்துக்கு ரூ.1000 வீதம் அதிகபட்சம் 32 மரத்துக்கு ரூ.32 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படும்

பரமத்தி வேலூர்

கபிலர்மலை வட்டா ரத்தில் ஏற்கனவே உள்ள தென்னந்தோப்பு களில் நோய் தாக்கிய, வயதான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்ப டுத்துவதற்கும், அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கும் விவசாயி களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

¼ ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை வயதான, நோய் தாக்கிய தென்னை, களை வெட்டி அப்பு றப்படுத்திவிட்டு புதிதாக தென்னங்கன்றுகள் நடுவதற்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது.ஒரு விவசாயிக்கு வெட்டி அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மரத்துக்கு ரூ.1000 வீதம் அதிகபட்சம் 32 மரத்துக்கு ரூ.32 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படும்.எனவே இந்த வாய்ப்பினை அனைத்து தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், மேலும் விபரங்களுக்கு வட்டார உதவி வேளாண்மை அலுவ லர்கள் சந்திரசேகரன், ரமேஷ், ஸ்ரீதர், கோகுல், செல்வி நிஷா ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News