உள்ளூர் செய்திகள்

அட்மா திட்டம் சார்பாக எர்ணாபுரம் விவசாயிகளுக்கு முன் பருவ பயிற்சி

Published On 2023-08-25 08:41 GMT   |   Update On 2023-08-25 08:41 GMT
  • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
  • அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் மோகன் விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கினார். விதை சான்று அலுவலர் ரஞ்சிதா, உதவி விதை அலுவலர் பொன்னுவேல், உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News