உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு நகராட்சி சுகாதார அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

திருச்செங்கோடு நகராட்சி சுகாதார அதிகாரிகள் கடைகளில் ஆய்வு

Published On 2023-07-15 14:55 IST   |   Update On 2023-07-15 14:55:00 IST
  • ஆய்வில் தடை செய்யப்பட்ட எலி மருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.
  • உணவுப் பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகு தியில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் எலிகளை கொள்ளும் மருந்துகளான எலி பேஸ்ட் மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திருச்செங்கோடு நகராட்சி சுகாதார அலுவலர் வெங்க டாசலம் தலைமையில் சுகா தார அலுவலர் குழு நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் தடை செய்யப்பட்ட எலி மருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் இதுபோல தடை செய்யப் பட்ட பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருச்செங்கோடு நகர் பகுதியில் இரவு நேரங்களில் செயல்படும் சாலையோர சிற்றுண்டி கடைகளில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றும் முறை எப்படி பின்பற்றப்படுகிறது என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வில் கழிவுகளை முறையற்று கையாளும் தற்காலிக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News