நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் கலெக்டர் உமா ஆய்வு
- கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன.
- மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர். சிலுவம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, ஆரியூர், அணியாபுரம், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஆய்வு
மொபைல் ரேசன் கடைமூலம் நாமக்கல் சிலுவம்பட்டி, போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொபைல் ரேஷன் கடை மூலம் பயன்பெறும் ரேசன் கார்டுகள், வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கலெக்டர் உமா கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும், தரமான உணவுப் பொருட்களை சரியான அளவில் வழங்கிட வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கிராமத்தில் ஆன்லைன் மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக நிலங்கள் வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.