உள்ளூர் செய்திகள்

நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-01-24 07:43 GMT   |   Update On 2023-01-24 07:43 GMT
  • கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாலிகையிடும் நிகழ்ச்சி நடந்தது.
  • சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

திருப்பூர் :

பழமைவாய்ந்த திருப்பூர் நல்லூர் விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் பிப்ரவரி 2ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ராஜகோபுரம், கருவறை விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கருங்கல் பதித்து பணிகள் நடந்துள்ளன. கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாலிகையிடும் நிகழ்ச்சி நடந்தது.

கும்பாபிேஷக விழா 29ந் தேதி வாஸ்து சாந்தி, கணபதி வழிபாடுடன் தொடங்குகிறது. 30ந் தேதி முதல் வேள்வி பூஜைகள் நடக்கின்றன. நான்காம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, பிப்ரவரி 1ந் தேதி காலை 5:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

பிள்ளையார்பட்டி தலைமை அர்ச்சகர் பிள்ளை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஸ்தானிகம் ராஜாபட்டர் தலைமையிலான குழு, கும்பாபிேஷக பூஜைகளை நடத்த உள்ளது.

இதேநாளில், நல்லூர் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீசெல்லாண்டியம்மன், ஸ்ரீபேச்சியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவும் நடைபெற உள்ளது.      

Tags:    

Similar News