உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் முருகனுடன் நளினி சந்திப்பு

Published On 2022-06-17 09:06 GMT   |   Update On 2022-06-17 09:06 GMT
  • நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
  • நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி தற்போது பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

15 நாட்களுக்கு ஒரு முறை இருவரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வேலூர் ஜெயிலில் முருகனை நளினி சந்தித்துப் பேசினார். இதற்காக காலை 10 மணிக்கு பிரம்மபுரத்திலிருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு 10.50 மணி முதல் 11.20 மணி வரை நளினி முருகன் இருவரும் சந்தித்து பேசினர். நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

சந்திப்பு முடிந்ததும் மீண்டும் நளினி பிரம்மபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News