உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை இந்திராநகர் பகுதியில் உள்ள கச்சேரி முனியப்பன் கோவிலை படத்தில் காணலாம்.

முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்கள்

Published On 2023-05-24 09:03 GMT   |   Update On 2023-05-24 09:03 GMT
  • இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்ைத கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
  • போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியில் கச்சேரி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்ைத கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனைநேற்று காலை கோவிலை திறந்து, சுத்தம் செய்ய வந்த நபர்கள் கோவிலின் உண்டியல் உடைத்திருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர். உடனடியாக கோவில் தர்மகர்த்தா ஆறுமுகத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.

இது தொடர்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டனர்.

அதில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம இரண்டு மர்ம நபர்கள், சாலை ஓரம் உள்ள கச்சேரி முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடி எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News