உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்

Published On 2023-03-08 15:36 IST   |   Update On 2023-03-08 15:36:00 IST
  • கடுமையான பனிப்பொழிவு போன்ற சீதோசன மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • தனியார் மருத்துவமனைகளும் பெரு மளவு குவிந்து வருகின்றனர்

பாப்பிரெட்டிப்பட்டி, 

தருமபுரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதாலும், அதிகாலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு போன்ற சீதோசன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள், வயதான வர்கள் என பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், மொரப்பூர், தருமபுரி அதனை ஒட்டி உள்ள நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளில் பெருமளவு பொதுமக்கள் சளி, காய்ச்சல், கண் எரிச்சல், கண் வீக்கம், தலைவலி, இருமல், உடல் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளும் பெரு மளவு குவிந்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இந்த நோய் பள்ளி குழந்தைகள் இடையே அதிக அளவில் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறிப்பாக சிந்தல் பாடி, பெம்மிடி, கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பையர் நத்தம் போன்ற பகுதிகளில் அரசு மருத்துவம னைகளில் போதிய செவிலியர்கள், மருத்து வர்கள் இல்லாததாலும் ஒரே நேரத்தில் அதிக அளவிலான புற நோயாளிகள் குவிவதாலும் மருத்துவம் பார்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உடல் நலம் பாதிக்கப்படுபவர்களை இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றால் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் கடத்தூர், சிந்தல்பாடி, பொம்மிடி அரசு மருத்துவமனைகளில் வெளியில் இருந்து வரும் நோயாளிகளை அழைத்து வரும், உறவினர்களுக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும் அடிக்கடி வாய் தகராலும் முற்றி வருகிறது.

தனியார் மருத்துவமனை களுக்குச் சென்றால் ஊசி போட்டு மருந்து வாங்கினால் ஒரு நோயாளிக்கு ரூ.500 செலவாகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்கள் கூடும் இடங்க ளிலும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News