உள்ளூர் செய்திகள்

மக்னா யானையின் நடமாட்டம் டிரோன் காமிரா மூலம் கண்காணிப்பு

Published On 2022-12-04 13:55 IST   |   Update On 2022-12-04 13:55:00 IST
  • கடந்த மாதம் 19-ந் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா்.
  • 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி

கூடலூா், தேவாலா வாழவயல் பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா். தொடா்ந்து பி.எம்.2 மக்னா என்ற அந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதனைத் தொடா்ந்து அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடைேய அந்த யானை நாடுகாணியை அடுத்த காரக்கொல்லி வனப்பகுதியில் உலவி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.

இதற்கிடையே கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரளிகண்டி வனப்பகுதியில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி வனச்சரக பணியாளர்கள் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினருடன், மக்னா யானையின் கால் தடத்தை வைத்து டிரோன் காமிரா மூலம் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது யானை முண்டக்கொல்லி வனப்பகுதிக்குள் யானை தென்பட்டுள்ளது.

இதனால் அந்த யானை இரவு நேரத்தில் வாச்சிக்கொல்லி, புளியம்பாறை, மரம்பிலா கோல்கேட், கோழிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த ெபாதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News