உள்ளூர் செய்திகள்

 கனரக வாகனங்கள் செல்வதால் சாலையில் புழுதி பறப்பதை படத்தில் காணலாம்.

காட்டுமன்னார்கோவிலில் குண்டு குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-11-20 07:12 GMT   |   Update On 2022-11-20 07:12 GMT
  • சாலை விரிவாக்க பணிகளுக்காக செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிக விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடை வீதிகளில் அதிக பாரம் ஏற்றுக் கொண்டு சாலை விரிவாக்க பணிகளுக்காக செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிக விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பழுதான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே ஏற்படும் பள்ளங்களில் கான்கிரீட் கலவைகளை கொட்டி மீண்டும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். அதோடு சாலையில் புழுதி பறப்பதால் அந்த பகுதி தூசி மண்டலமாக காட்சி தருகிறது.

எனவே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இது தொடர்பான தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளும் உடனடியாக காட்டுமன்னார்கோயில் பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களின் துயரை நேரில் ஆராய்ந்து இந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் இந்த சாலைகளை சரி செய்யா விட்டால் சாலை மறியல் நடத்தப் போவதாக இந்திய மனித உரிமை கட்சி மற்றும் சிறுகுறு விவசாய சங்க தலைவர்கள், பகுஜன் ஜமாஜ் கட்சி நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News