உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே திருப்பதி சென்ற தாய் மாயம்::மகன் போலீசில் புகார்
- தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சீத்தாலட்சுமி (வயது 45).
- இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சீத்தாலட்சுமி (வயது 45). இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கண்ணதாசன் மகன் ஆனந்தராஜ் (23) கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.