தருமபுரி மாவட்டத்தில் மிதமான மழை-விவசாயிகள் மகிழ்ச்சி
- பழைய தருமபுரி கலெக்டர் அலுவலகம் நல்லம்பள்ளி, தொப்பூர், சோகத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி களில் மிதமான மழை பெய்தது.
- இந்த மழையால் விவசாயிகள் உழவு பணி தொடங்குவதற்கு பயனுள்ளதாக உள்ளது.
தருமபுரி,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மழை பொய்த்து போனது.
இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னி யாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங் களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு இரு மத்தூர், திப்பம்பட்டி, அரூர், மொரப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மாலை 5.30 மணி முதல் தருமபுரி, பழைய தருமபுரி கலெக்டர் அலுவலகம் நல்லம்பள்ளி, தொப்பூர், சோகத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி களில் மிதமான மழை பெய்தது.
கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையால் விவசாயிகள் உழவு பணி தொடங்குவதற்கு பயனுள்ளதாக உள்ளது.