தனியார் பள்ளி பஸ்சில் டீசல் திருடிய மர்ம நபர்கள்
- பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து டீசலை திருடினர்.
- டீசல் திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி அருகே வீட்டின் முன்பு தனியார் பள்ளியின் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த பகுதியில் கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்து 3 பேர் இறங்கி வந்தனர். அவர்கள் கையில் பெரிய டீசல் பிடிக்கும் கேன் ஒன்றை கொண்டு வந்து தனியார் பள்ளி பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து டீசலை திருடினர். பின்னர் அந்த 3 பேரும் அவர்கள் வந்த காரில் மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. அதில் மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்கி டீசல் திருடும் காட்சிகள் அந்த பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தனியார் பள்ளி வாகனங்களில் டீசல் திருடு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.