உள்ளூர் செய்திகள்

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்த சங்கரன்கோவில் மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-10-14 08:29 GMT   |   Update On 2023-10-14 08:29 GMT
  • மாணவி முவித்ரா 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
  • ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன், கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா. 6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் மாணவி முவித்ரா சங்கரன்கோவில் கழுகுமலை சாலையிலிருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ல் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார். அப்போது விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா பயிற்சி நிலைய நிறுவனர் சுரேஷ்குமார், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ், முவித்ராவின் தாயார் கோகிலா மற்றும் மாஸ்டர் சாந்தனு, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News