உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

பண்டிகை நாட்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் நாசர்

Published On 2022-09-07 20:31 GMT   |   Update On 2022-09-07 20:31 GMT
  • அனைத்து நுகர்வோர்களுக்கும் பால் பொருட்கள் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும்.
  • அதிகாரிகள் மற்றும் பால் விற்பனையாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் சென்னை பெருநகர மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து பால் உரிய நேரத்திற்கு வருவதையும் அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைவதையும் கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறைந்த விற்பனை மேற்கொண்ட, மொத்த பால் விற்பனையாளர்களை பால் விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அவர் எடுத்துரைத்தார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள எதிர்வரும் பண்டிகை நாட்களில் அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிமுறைகள் வகுக்கப்பட்டு, கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க ஆலோசனைகள் அவர் வழங்கினார்.

ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவ்வப்போது தங்கள் பகுதிக்குட்பட்ட பால் விற்பனை மையங்கள் மற்றும் பாலகங்களை நேரில் சென்று ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றை விறைந்து நிவர்த்தி செய்ய அமைச்சர் உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News