உள்ளூர் செய்திகள்

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமைச்சர் கயல்விழி கலந்துரையாடினார். அருகில் கலெக்டர் முரளிதரன் மற்றும் பலர் உள்ளனர்.

தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

Published On 2022-10-29 10:15 IST   |   Update On 2022-10-29 10:15:00 IST
  • தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
  • விடுதிகளில் விளையாட்டு அரங்குகள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ெதரிவித்தார்.

தேனி:

தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, நகராட்சி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மற்றும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி) மற்றும் சரவணக்குமார் (ெபரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சிப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் விடுதிகளில் பணியாளர்கள், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதியில் மாணவ, மாணவிகள் தங்கும் அறை, சமையலறை, அரசின் அட்டவணைப்படி உணவு வகைகள், சமைப்பதற்கு தேவையான உணவு பொருட்களின் இருப்பு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குளியலறை,

கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை குறித்தும், தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மற்றும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள், உள்ளிட்டவைகள் குறித்தும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாணவ, மாணவிகளின் வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று வாசிப்புத்திறன், எழுத்து திறன் குறித்து கலந்துரையாடி ெதரிவித்ததாவது:-

தேனி-அல்லிநகரம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 2 புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்கு சுமார் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தேனி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சுமார் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் மாலை மற்றும் காலை நேரங்களில் கூடுதலாக பயிற்சி வகுப்புகள் நடத்திடவும், விடுதிகளில் காலியாகவுள்ள இடங்களில் பப்பாளி, கீரை போன்ற சத்தான காய்கறிகளை பயிரிட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கிடவும்,

போதிய இடவசதியுள்ள விடுதிகளில் விளையாட்டு அரங்குகள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ெதரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News