உள்ளூர் செய்திகள்

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

கபிஸ்தலம் ஊராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- அமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2022-09-23 07:50 GMT   |   Update On 2022-09-23 07:50 GMT
  • புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார்.
  • நிகழ்ச்சிகள் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் பவுண்டு பகுதியில் ரூபாய் 21 லட்சம் செலவில் கட்டப்பட்ட வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழா தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா தலைமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்குக்கு ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சிகள் அரசு தலைமை கொறடா செழியன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம், உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News