உள்ளூர் செய்திகள்

ஆதி நாகாத்தம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

ஆதி நாகாத்தம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2023-08-24 10:23 GMT   |   Update On 2023-08-24 11:13 GMT
  • ஆவணி மாதம் நாகசதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  • பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

சீர்காழி:

கொள்ளிடம் அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

அதேபோல் இந்த வருடம் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதல் நாளிலிருந்து பத்தாம் நாள் வரை காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் தலையில் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக நாகத்தம்மன் கோயிலுக்கு வந்து அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்த பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு நாகாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு திபாரதனை காட்டப்பட்டது.

விழாவில் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோயில் அறங்காவலர் தெய்வேந்த அடிகளார் மற்றும் விழா குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News