உள்ளூர் செய்திகள்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் அருகேயுள்ள சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

கடலூரில் நள்ளிரவில் மழை: திடீர் மின்தடையால் இருளில் தவித்த பொதுமக்கள்

Update: 2022-08-18 07:31 GMT
  • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேல்வளி மண்டல சுழற்றி காரண மாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் பயிர் வகைகள் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்தனர். இதனிடையே நேற்று நள்ளிரவு திடீரென கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், நடுவீரப் பட்டு, பாலூர் ஆகிய பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒருசில கிராமங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராம பொது மக்கள் இருளில் தவித்த னர். ஏற்கனவே தொடர் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர் மண்ணில் சாய்ந்து உள்ளது. இத னால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News