உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

தருமபுரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

Published On 2023-10-17 15:33 IST   |   Update On 2023-10-17 15:33:00 IST
  • நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார்.
  • கட்சியினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தருமபுரி,

தருமபுரி அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு இன்று 52-வது ஆண்டு அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடி ஏற்றியும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைப்பு செயலாளர் கே.பி.அன்பழகன் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் அ.தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News