உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்

Published On 2022-10-08 15:02 IST   |   Update On 2022-10-08 15:02:00 IST
  • பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
  • வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.

ஓசூர்,

ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில், "ஜெலோஸ் ஆங்கில மொழி கற்பித்தல் முறை" பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஆங்கிலத்துறைத் தலைவர் பழனிக்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்து மணி தலைமை தாங்கி பேசினார்.

அமெரிக்க சவுத் கரோலினா பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கோர்ட்னி பெய்லி, ஆங்கில இலக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.

மேலும், ஆங்கிலம் கற்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தன்னம்பிக்கை வளர்த்து கொள்வது பற்றியும் அவர் விரிவாக பேசினார். முடிவில், ரேகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News