உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து பணிமனையில் மருத்துவ முகாம்

Published On 2022-12-30 15:21 IST   |   Update On 2022-12-30 15:21:00 IST
  • கெலமங்கலம் வட்டார மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • தோல நோய், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, உள்ளி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போக்குவரத்து கிளை பணிமனையில் கெலமங்கலம் வட்டார மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு துணை இயக்குநா சுகாதார பணிகள் மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா ராஜேஷ்குமார் தலைமையில் பயிற்சி மருத்துவ அலுவலா விமல, மருத்துவர்கள் சகதிவேல், சுதா, சாரதா, பல் மருத்துவர் லட்சுமி, நடமாடும் மருத்துவ குழுவினர் தினேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தேன்கனிக்கோட்டை போக்குவரத்து கிளை பணிமனை ஓட்டுனர், நடத்துனர். தொழில்நட்ட பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 200 பணியாளர்களுக்கு கண், காது, முக்கு, தொண்டை தோல நோய், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, உள்ளி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் கிளை மேலாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News