உள்ளூர் செய்திகள்
ஓசூர் பகுதியில் மேயர் சத்யா நேரில் ஆய்வு
- மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
- குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டிற்குட்பட்ட பகுதி-10 ஹட்கோ பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 117 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படு கிறதா? எனவும் கேட்ட றிந்தார்.
பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் குபேரன் உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் உடன் இருந்தனர்.