உள்ளூர் செய்திகள்

காமாட்சி மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-06-12 10:13 GMT   |   Update On 2022-06-12 10:13 GMT
  • திருவிழாவை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
  • இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் காமாட்சி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதியை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற தீமிதி உற்ச்சவத்தின் போது காமாட்சி மகாமாரியம்மன் தீகுண்டம் அருகே எழுந்தருள சக்தி கரகத்தை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவில் தென்பாதி, சட்டநாதபுரம், கைவிளாஞ்சேரி, ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கன பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி மகாமாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News