உள்ளூர் செய்திகள்
- ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
- பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
கருப்பூர் ரெயில் நிலையத்துக்கும் மேக்னசைட் ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் காபி கலர் பேண்ட், சிமெண்ட் கலர் கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.