உள்ளூர் செய்திகள்

பேளூரில் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர்–சிறுமியரை படத்தில் காணலாம்.

பேளூரில் சிறுவர்-–சிறுமியர் நடத்திய மார்கழி வழிபாட்டு ஊர்வலம்

Published On 2022-12-17 14:43 IST   |   Update On 2022-12-17 14:43:00 IST
  • வாழப்பாடி அருகே பழங்காலத்தில் மார்கழியில், சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு.
  • ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு,‌ பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க பேளூர், பழங்காலத்தில் வேள்வியூர் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிகத் தலமாக விளங்கியது. பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத் தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவிலும், தென் கரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், வைணவ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழியில், இப்பகுதி சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று, வழிபாடு நடத்துவதும் பல ஆண்டுகளாக மரபு மாறாமல் நடந்து வருகிறது.

நூறாண்டுக்கு மோலாக தொடர்ந்து வரும் சிறுவர்களின் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து வரவேற்று, சிறுவர்–சிறுமியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வழிபடுவர்.

பேளூரில், நிகழ்வாண்டு நடுங்கும் குளிரிலும், அதி காலையில் விழித்தெழுந்த சிறுவர்–சிறுமியர், மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு,‌ பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.

Tags:    

Similar News