உள்ளூர் செய்திகள்
மார்கழி மாத மகத்துவம் பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு
- மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் மார்கழி மாதத்தின் அவசியம் குறித்து விளக்கினர்
- 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மார்கழி மாதத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் பஜனை பாடினர்.
பொன்னேரி:
பொன்னேரி, சிவன் கோயில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மார்கழி மாதத்தின் மகத்துவம் குறித்து பஞ்செட்டி ஸ்ரீ கோரண்ட்லா இராமலிங்கய்யா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் மார்கழி மாதத்தின் அவசியம் மற்றும் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஜனை பாடினர். மேலும், மார்கழி மாதத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் மாணவர்கள் சிவன், பார்வதி ரங்கன் ஆண்டாள் வேடமிட்டு வந்திருந்தனர். மார்கழி மாதத்தின் சிறப்பு குறித்து உரை நிகழ்த்தினர்.